search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவையில் முன் விரோதத்தில் தொழிலாளிக்கு கத்திக்குத்து

    மோட்டார் சைக்கிளை கொடுக்க மறுத்து அவரே ஓட்டி வந்தார்
    கோவை:

    கோவை செல்வபுரம் அருகே உள்ள தேவேந்திரா வீதியை சேர்ந்தவர் இந்திரகுமார் (வயது 26). கட்டிட தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ள விஜயராஜ் என்பவரின் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார்.
     
    இந்த மோட்டார் சைக்கிளை விஜயராஜின் நண்பரான ரஜித்குரு என்கிற கும்கி என்பவர் தன்னிடம் கொடுக்கும்படி கேட்டு வந்தார். ஆனால் இந்திரகுமார் மோட்டார் சைக்கிளை கொடுக்க மறுத்து அவரே ஓட்டி வந்தார். இது ரஜித்குருவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்திரகுமாரை கொலை செய்ய திட்டமிட்--டார்.

    சம்பவத்தன்று இந்திர-குமார் மோட்டார் சைக்-கிளில் போயர் வீதி வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது முத்துமாரியம்மன் கோவில் அருகே ரஜித்குரு மற்றும் அவரது நண்பர்கள் 2 சேர்ந்து இந்திரகுமாரை தடுத்து நிறுத்தினர். 

    பின்னர் தகாத வார்த்தை--களால் பேசி தாக்கினர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து இந்திரகுமாரின் மார்பு, கழுத்து ஆகிய பகுதிகளில் குத்தினர். 

    பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வரு-கிறார்கள்.

    இது குறித்து செல்வபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்-பதிவு செய்து இந்திரகுமாரை கத்தியால் குத்திய ரஜித்குருவை கைது செய்தனர். 

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்-படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மணி-கண்டன், ஜீவானந்தம் ஆகி-யோரை தேடி வருகிறார்கள். 
    Next Story
    ×