search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த போது எடுத்தப்படம்.
    X
    பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த போது எடுத்தப்படம்.

    பீமநகர் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

    பீமநகர் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    திருச்சி :

    திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து சாலைகள் சரி இல்லை, தெரு விளக்குகள் எரியவில்லை, பாதாள சாக்கடைகள் வெளியில் வருகிறது என்றெல்லாம் பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் தரப்பில் மாநகராட்சியில் தெரிவித்து வருகிறார்கள். அதனை சரி செய்ய வலியுறுத்தி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் நான்கு கோட்ட உதவி ஆணையர்களுக்கும் உத்தரவிட்டார்.


    அந்த அடிப்படையில் மாநகராட்சி 4வது மண்டலம் உதவி ஆணையர் சண்முகம், கோட்ட தலைவர் துர்க்காதேவி ஆகியோர் தலைமையில் இன்று திருச்சி பீமநகர் பகுதிகளைச் சுற்றியுள்ள கண்டி தெரு, கீழத்தெரு, மார்க்சின் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

    பொதுமக்கள் எங்கள் பகுதியில் அதிகமாக பாதாள சாக்கடை உடைப்புகள் ஏற்படுகிறது. தெரு விளக்குகள் சரியாக இயங்கவில்லை. என்றெல்லாம் அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.

    இதற்கு உங்கள் பகுதிகளில் தற்போது என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்றெல்லாம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது அதனை விரைவில் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    பீமநகர் பகுதியை பொருத்தமட்டில் அனைத்து தெருக்களிலும் உள்ள தெருவிளக்குகள், பாதாள சாக்கடையில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மாநகராட்சியில் முறையிடப்பட்டுள்ளது விரைவில் அதற்கான தீர்வு கிடைக்கும். ஆகவே பொதுமக்கள் கவலை அடையவேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×