search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் யானை
    X
    பெண் யானை

    டாப்சிலிப் முகாமில் 40 ஆண்டுகள் வலம் வந்த பெண் யானை கவலைக்கிடம்

    கடந்த ஒரு வாரமாக யானை உணவு உட்கொள்ளாமல் சோர்வுடன் காணப்படுகிறது.
    ஆனைமலை: 

    ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள பானத்தியாறு என்ற வனப்பகுதியில் இருந்து பெண் யானை ஒன்று கடந்த 1973-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மீட்கப்பட்டது. 

    பின்னர் அந்த யானை டாப்சிலிப்பில் உள்ள கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமுக்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த யானைக்கு விஜயலட்சுமி என பெயரிட்டு பாகன்கள் பயிற்சி அளித்து வந்தனர். வனப்பணிகளில் அந்த யானை ஈடுபடுத்தப்பட்டு வந்தது. 

    தற்போது அந்த யானைக்கு 72 வயது ஆகிறது.  வயது முதிர்வின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அந்த யானை வனப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவது இல்லை. இந்த நிலையில் யானை திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக யானை உணவு உட்கொள்ளாமல் சோர்வுடன் காணப்படுகிறது.  

     யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவெடுத்த வனத்துறையினர் வன கால்நடை மருத்துவர் சுகுமாரன்  மூலம் கடந்த 4 நாட்களாக யானைக்கு மருத்துவம் பார்த்து வந்தனர். யானையின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால் அடுத்தகட்ட சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய விஜயலட்சுமி என்ற பெண் யானை உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளதால் யானைகள் பயிற்சி முகாமே சோகத்தில் மூழ்கியது. 
    Next Story
    ×