search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் கோவிலின் ஆண்டு திருவிழா
    X
    ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் கோவிலின் ஆண்டு திருவிழா

    ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் திருவிழா

    கரூர் அரசு காலனி ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் கோவிலின் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது.
    கரூர்:

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் பஞ்சமாதேவி கிராமம் அரசு காலனி ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் கோவிலின் 33 ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது.  

    விழாவில் திருச்சி புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்.
    கோவிலில் சிவபெருமான், விஷ்ணு பெருமான், முருகப் பெருமான், கேது பகவான் வழிபாடு என பல்வேறு வழிபாடுகளை நடைபெற்று வருகிறது.  

    இதன் ஒரு பகுதியாக நாளை பூத்தட்டு எடுத்து வருதலும், நாளை மறுநாள் பால்குடம், அக்னிச்சட்டி, அலகு, கரும் தொட்டில், மற்றும் மொட்டை அடித்தல் ஆகிய நிகழ்ச்சிகளும்,

    19&ந் தேதி மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், 20 ந் தேதி மஞ்சள் நீராட அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் பவனி வருதல், நெரூர் காவிரி ஆற்றில் கம்பம்  விடுதல் நிகழ்ச்சியும், 24 ந் தேதி பிரசாதம் மற்றும் அம்மன் படமும் வழங்கப்படுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் காலனி சேகர் சுவாமிகள் செய்துள்ளார்.
    Next Story
    ×