search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    தேசிய ஊரக திட்ட குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரி நியமனம்

    தேசிய ஊரக திட்ட குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளது.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் வழங்கப்ப ட்டுள்ள அதிகாரங் களுக்குட்பட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கு றைகளை நிவர்த்தி செய்வதற்கான கரூர் மாவட்ட குறைதீர்ப்பு அதிகாரியாக பாலசுந்தரம் பொறுப் பேற்றுள்ளார்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட குறைதீர்ப்பு அதிகாரியின் அதிகாரங்கள்  மற்றும் கடமைகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாள ர்களிடமிருந்து வரும் புகார்களை பெற்று 30 நாட்களுக்குள் புகார்களை பரிசீலித்து உரிய  நடவடிக்கை மேற்கொள்வார். பிரச்சனை நடைபெறும் இடத்திலேயே விசாரணை நடத்தலாம்.

    பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குதல் தொடர்பான பிரச்சினைகள் உட்பட குறைகள் மீதும்  நடவடிக்-கைகளை மேற்கொள்ளுவார். மேலும் தங்களது புகார்களை குறை-தீர்ப்பாளர் மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம்,  இரண்டாவது தளம் கரூர் என்ற முகவரிக்கு மனுக்களாகவும்  அனுப்பலாம்.

    எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் குறைபாடுகள் இருப்பின்  நிவர்த்தி செய்திடும் பொருட்டு பொது-மக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் கரூர் மாவட்டத்தின் குறைதீர்ப்பு அதிகாரி பாலசுந்தரத்தை 99449 48878  தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
    Next Story
    ×