search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளழகர்,
    X
    கள்ளழகர்,

    கள்ளழகர் தசாவதார காட்சிகள்

    மதுரையில் நாளை கள்ளழகர் தசாவதார காட்சிகள் நடைபெற உள்ளது.
    மதுரை

    வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் அங்கு வையாளி  ஆனவுடன் அங்கிருந்து புறப்பட்டார். வீரராகவப் பெருமாள் அவரை எதிர்கொண்டு மாலை சாத்தி வரவேற்றார். பின்னர் ராமராயர் மண்டபம் எழுந்த ருளியதும் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர்.

    அங்கிருந்து வண்டியூர் புறப்படும் கள்ளழகர் வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார். நாளை (17ந்தேதி) காலை ஏகாந்த சேவைகோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    பின்னர் சேஷவாகனத்தில் புறப்பட்டு கள்ளழகர் தேனூர் மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு  கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக மாமுனிவருக்கு சாபவிமோசனம் வழங்கும் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து அனுமார் கோவிலில் அங்க பிரதட்சணம் நடக்கிறது.

    இரவு 11 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு இரவு முழுவதும் தசாவதார நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்மஅவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் என பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    18ந்தேதி காலை 6மணிக்கு மோகினி அவதாரத் தில் எழுந்தருளுகிறார்.  பகல் 12 மணிக்கு திருமஞ்சணமான பின்பு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில்  எழுந்தருளி ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு வருகிறார். 

    19ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு அங்கிருந்து பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் அழகர் கோவில் நோக்கி புறப் படுகிறார். பல்வேறு மண்டகப்படிகளுக்கு எழுந்தருளும் அழகர் 20ந்தேதி காலை தனது இருப்பிடமான அழகர்மலை செல்கிறார். 21ந்தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவுபெறுகிறது.

    Next Story
    ×