search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
    X
    ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    நாளை ஈஸ்டர் பண்டிகை குமரி மாவட்ட ஆலயங்களில் இன்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி கடற்கரை கிராமங்களில் போலீசார் கண்காணிப்பு

    நாளை ஈஸ்டர் பண்டிகை குமரி மாவட்ட ஆலயங்களில் இன்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி கடற்கரை கிராமங்களில் போலீசார் கண்காணிப்பு
    நாகர்கோவில், ஏப்.16-

    கிறிஸ்தவர்கள் கொண் டாடும் முக்கிய விழாக்க ளில் ஒன்று ஈஸ்டர் பண் டிகை.

    இயேசு கிறிஸ்து கல்வாரி  மலையில் மரித்து 3-வது நாளில் உயிர்த்தெழுந்தார்.  இந்த நிகழ்வை கொண்டா டும் விழாதான் உயிர்ப்பு பெருவிழா.

    உயிர்ப்பு பெருவிழாவுக்கு முன்புள்ள 46 நாட்களை கிறிஸ்தவர்கள்  தவக் காலமாக கடைப்பிடிப்பார்கள். சாம்பல் புதன் நாள் அன்று இத்தவக்காலம் தொடங்கும். அன்றிலிருந்து புனித வெள்ளி வரை தவக்காலம் தொடரும். 

    புனித வெள்ளி அன்று அனைத்து ஆலயங்களிலும் இயேசுவின் பாடுகளை சித்தரிக்கும் சிலுவைபாதை நிகழ்ச்சி நடைபெறும். அதனை தொடர்ந்து வரும் ஞாயிற்றுகிழமை ஈஸ்டர் வழிபாடுகள் நடக்கும். 

    கத்தோலிக்க ஆலயங்களில் இன்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெறும். இதற்காக அனைத்து ஆலயங்களும் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கும்.

    கோட்டார் சவேரியார் பேராலயத்தில் ஆயர் நசரேன் சூசை தலைமையில் இன்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இதுபோல கன்னியாகுமரி தூய அலங்கார உபகார  மாதா  திருத்தலம், நாகர்கோவில் அசிசி ஆலயம், புன்னை நகர் புனித லூர்து அன்னை ஆலயம், வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயம்.

    குளச்சல் காணிக்கை மாதா ஆலயம், வெட்டு வென்னி அந்தோணியார் ஆலயம், தக்கலை எலியா சியார் ஆலயம், குலசேகரம் அகஸ்டினார் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் இன்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.

    இதுபோல தென்னிந்திய திருச்சசை ஆலயங்களிலும் ஈஸ்டர் தின சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகிறது. நாகர்கோவில், வெட்டூர்ணிமடம், கருங்கல்,  குளச்சல், ஆனக்குழி, சீயோன்புரம் என அனைத்து ஆலயங்களிலும்  ஈஸ்டர் வழிபாடுகள் நடக்கிறது.

    மேலும் பெந்தேகோஸ்தே சபைகளிலும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஜெபக் கொண்டாட்டங்கள் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர் கிராமங்க ளிலும் ஈஸ்டர்  பண்டிகை உற்சாகமாக கொண் டாட்டப்படும். வெளியூர் களுக்கு பணிக்கு சென்றி ருந்த மீனவர்கள்  இதற்காக சொந்த ஊர் திரும்பி உள்ளனர்.

    ஈஸ்டர் பண்டிகையை யொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். 

    கொரோனா பிரச்சினையால் கடந்த 2 ஆண்டுக ளாக உற்சாகமின்றி நடந்த ஈஸ்டர் பண்டிகை இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக உற் சாகமாக கொண்டாடப்படுகிறது.

    Next Story
    ×