
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஸ்ரீ ஹேரம்ப பஞ்ச முக விநாயகருக்கு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 18 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதுபோல் பரமத்திவேலூர் பேட்டை மகாமாரியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மகா மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு மலர்கள் மற்றும் காய்கனி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.