search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன்லாரி தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கிறது.
    X
    மீன்லாரி தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கிறது.

    நடுரோட்டில் தலைகீழாக கவிழ்ந்த மீன்லாரி

    திருமங்கலம் 4 வழிச்சாலையில் மீன்லாரி நடுரோட்டில் தலைகீழாக கவிழ்ந்தது.
    திருமங்கலம்

    கேரளாவில் இருந்து புதுச்சேரி மாநிலம் காரைக் காலுக்கு விற்பனைக்காக மீன்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி விருதுநகர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. லாரியை ராமமூர்த்தி என்பவர் ஓட்டினார்.

    இன்று அதிகாலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் காட்டு பத்திரகாளி யம்மன் கோவில் அருகே நான்கு வழிச்சாலையில் வந்தபோது திடீரென கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இடதுபுறமாக அமைக்கப்பட்டிருந்த தடுப்புவேலியில் மோதி நடுரோட்டில் தலைகீழாக கவிழ்ந்தது. 

    டிரைவர் ராமமூர்த்தி, கிளீனர் ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இந்த நிலையில் சாலையின் நடுவே லாரி கவிழ்ந்ததால் அந்த பகுதியில் பின்னால் வந்த வாகனங்கள் அனைத்தும் செல்லமுடியாமல் சாலையிலேயே நிறுத்தப்பட்டது.

    சுமார் அரை மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  விருதுநகர்-திண்டுக்கல் சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள்   அணிவகுத்து நின்றன. அதிக எடை கொண்டதாக இருந்ததால் இரண்டு கிரேன் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தலைகீழாக கவிழ்ந்து இருந்ததை நேராக நிறுத்தி சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டது. 

     தொடர்ந்து அந்தபகுதியில் போக்குவரத்து சீர்செய்யப்பட்டு வாகனங் கள்  புறப்பட்டுச்சென்றன. விபத்து குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போலீசார் லாரியின் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
    Next Story
    ×