search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூயில் மின் ஆற்றல் திறனை அதிகரித்தல் குறித்த  கருத்தரங
    X
    தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூயில் மின் ஆற்றல் திறனை அதிகரித்தல் குறித்த கருத்தரங

    தொழிற்சாலைகளில் மின் ஆற்றல் திறனை அதிகரித்தல் குறித்த கருத்தரங்கம்

    தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் தொழிற்சாலைகளில் மின் ஆற்றல் திறனை அதிகரித்தல் குறித்த கருத்தரங்கம் நடை பெற்றது.
    திருச்சி:

    தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூயில்  தன்னாட்சி  மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் எனர்ஜிகிளப் அசோசியேசன் சார்பாக தொழிற்சாலைகளில் மின் வினியோகத்தின் ஆற்றல் திறனை அதிகரித்தல் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு  கொங்குநாடு கல்வி நிறுவன தலைவர் முனைவர் பிஎஸ்கே பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. 

    இக்கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் உதவி பேராசிரியர் சுரேஷ் கலந்து கொண்டு தொழிற்சாலையில் அடிப்படை மின் ஆற்றல் பாதுகாப்பு நடவடிக்கை முறையை பற்றியும் மற்றும் தொழில்துறை மின் அமைப்பில் பரிமாற்ற விநியோக இழப்புகள் பற்றியும் தமது சிறப்புரையில் எடுத்துரைத்தார். 

    மேலும் சிறப்பு விருந்தினர் தமது சிறப்புரையில் எதிர்வினை மின்னாற்றல் சக்தி இழப்பீட்டை பராமரிக்கும் முறை மற்றும் ஜவுளி இயந்திரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.  

    கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தன்னாட்சி முதல்வர் முனைவர் அசோகன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் டீன் முனைவர் யோகப்பிரியா வாழ்த்துரை வழங்கினார். 

    கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் சங்கர் அனைத்து துறை மாணவர்களையும் ஊக்குவித்து பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். 

    முன்னதாக மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவன் சரவணக்குமார் வரவேற்றார். முடிவில் மாணவி ஹேமலா நன்றி கூறினார்.

    Next Story
    ×