search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம்
    X
    மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம்

    ராமேசுவரம் மீனவர்கள் மறியல் போராட்டம் நடத்த முடிவு

    ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பகுதியில் வருகிற 19ந் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
    ராமேசுவரம்:

    இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 12 பேருக்கு ஜாமீனில் வர வைப்பு தொகையாக இலங்கை மதிப்பில் தலா ரூ.1 கோடி விதித்தது. இதனையடுத்து ராமேசுவரம் மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று இரவு தங்கச்சிமடம் வலசை தெருவில் நடந்தது.

    ராமநாதபுரம் மாவட்ட மீனவ சங்க செயலாளர். சேசுராஜா தலைமை வகித்தார். மீனவசங்க பிரதிநிதிகள் சகாயராஜ், எமரிட், மற்றும் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இலங்கை கிளிநொச்சி நீதிமன்றத்தில் நேற்று ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை போலீசார் ஆஜர்படுத்தினர். மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி மீண்டும் அவர்களுக்கு காவலை நீட்டித்து உத்தரவிட்டார். அதன் பின்னர் மீனவர்கள் விருப்பப்பட்டால் ஜாமீனில் வெளிவரலாம் எனவும், மீனவர்கள் வெளிவரும் பட்சத்தில் நீதிமன்றத்திற்கு காப்பு தொகையாக இலங்கை மதிப்பில் தலா ரூ.1 கோடி கட்ட வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராமேசுவரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்திய இலங்கை மீனவர்களின் நட்புறவை களங்கப்படுத்தும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

    இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை ரத்து செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிற 19ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர்.

    Next Story
    ×