என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  FILE PHOTO
  X
  FILE PHOTO

  கத்தி முனையில் நகை-செல்போன் வழிப்பறி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சியில் கத்தி முனையில் வாலிபரிடம் நகை, செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  திருச்சி:

  திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 40). இவரது மகன் சினேகன் (20). இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் சஞ்சீவி நகர் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

  அப்போது பயங்கர ஆயுதங்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் சினேகனிடம் இருந்து செல்போன் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

  பின்னர் சினேகனும் அவரது நண்பர்களும் மர்ம நபர்களை விரட்டி சென்று நகையையும் செல்போனையும் மீட்க முயற்சித்தனர்.

  அப்போது மர்ம நபர்கள் தாங்கள் மறைத்திருந்த அரிவாளை எடுத்து சினேகனின் நண்பர்களையும் அவரையும் வெட்டுவதற்கு முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பின்வாங்கினர்.

  அப்போது மர்ம நபர்கள் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் சினேகன் இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

  விசாரணையில் திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (20) திருஞானசம்பந்தமூர்த்தி (26) ஆகிய இருவரையும் கோட்டை போலீசார் பிடித்தனர். அவர்கள் தான் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

  பின்னர் கோட்டை போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
  Next Story
  ×