search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயனடைந்த விவசாயி வாங்கல்.
    X
    பயனடைந்த விவசாயி வாங்கல்.

    கரூர் மாவட்டத்தில் 2,839 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு

    தமிழக அரசின் ஒரு லட்சம் மின் இணைப்பு இத்திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் 2,839 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
    கரூர்:

    கரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழக முழுவதும் இலவச மின்சாரத்திற்காக விவசாயிகள் பதிவு செய்து பல ஆண்டுகளாக காத்திருந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றதும் இலவச மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க நடவடிக்கைகள் எடுத்தது.

    மாநிலம் முழுவதும், ரூ.3,025 கோடியில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்தில் 2,869 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க இலக்கீடு ஒதுக்கப்பட்டது. கரூர் மாவட்ட மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்களின் துரித நடவடிக்கையால் தற்போதுவரை 2,839 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மீதமுள்ள விவசாயிகளுக்கும் விரைவில் இலவச மின் இணைப்பு வழங்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ள உப்பிடமங்கலம் பேரூராட்சி கீழ் பாகம்  கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கூறுகையில், எங்கள் பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்து விவசாயம் செய்து வருகிறோம்.

    விவசாயத்திற்கு மின் இணைப்பு கேட்டு பத்து வருடமாக அலைந்தும் மின் இணைப்பு கிடைக்கவில்லை. கடன் வாங்கி விவசாயம் செய்து செலவு செய்யக்கூட வருமானம் இல்லாத நிலையில் இருந்தோம்.

    இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்க அறிவிப்பு கொடுத்தவுடன் வறுமையில் இருந்த எங்க மனசு நிறைந்தது பத்து வருடமாக ஏமாற்றத்தை மட்டும் சந்தித்த எனக்கு தமிழக முதல்வர் ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களில் இலவச மின்சாரம் இணைப்பு கொடுத்துட்டாங்க.

    விவசாயிகளுக்கு மரியாதை கொடுத்து கலைஞர் இலவச மின்சாரம் கொடுத்தார். இப்போ ஸ்டாலின் எங்களுக்கு கரண்ட் கனெக்சன் கொடுத்து இருக்காரு. நாடு செழிக்க விவசாயத்திற்கு புத்துயிர் வழங்கும் வகையில் எங்கள் வாழ்க்கையில் மகத்தான திட்டத்தைக் கொண்டு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், எங்கள் ஊர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் நன்றியோடு இருப்போம். விவசாயிகள் சார்பாக எனது நன்றியை கூறிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×