search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
    X
    கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    சப்தகிரி நகரில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி- சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    சப்தகிரி நகரில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை சப்தகிரி நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாய்க்கால் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

    இந்த நிலையில் சப்தகிரி நகரில் மழைநீர் தேங்காமல் வெளியேற ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. இதனை சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 

    நிகழ்ச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைமை செயல் அதிகாரி டாக்டர் அருண், இணை தலைமை செயல் அதிகாரி மாணிக்கதீபன், தலைமை தொழில்நுட்ப அதிகாரி ரவிச்சந்திரன், பொதுமேலாளர் மாணிக்கவாசகம் மற்றும் சப்தகிரி நகர் குடியிருப்பு நல்வாழ்வு சங்க தலைவர் சிவானந்தம், துணைத் தலைவர்கள் முனுசாமி மற்றும் குமார், செயலாளர் சோமு, துணை செயலாளர் சந்திரன், செயற்குழு உறுப் பினர்கள் பலராமன், சிவா, முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
    Next Story
    ×