search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி
    X
    வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி

    மேகா அக்ரி கிளினிக்கில் வேளாண் மாணவிகள் பயிற்சி

    மன்னார்குடி மேகா அக்ரி கிளினிக்கில் வேளாண் தொழில்முனைவு பயிற்சியளித்தனர்.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மேக அக்ரி கிளினிக்-மேகாமெஷின்ஸ்  நிறுவனத்தில்  திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு வேளாண் பட்டயப்படிப்பு படிக்கும் மாணவிகள் ப.மோனிகா, ரா.மோனிகா, நாகவர்ஷினி, நிஹாஅஞ்சும், ந.நிவேதா, வெ.நிவேதா, ஓவியா, வசந்தா, செ.பவித்ரா, சீ.பவித்ரா, வி.பவித்ரா ஆகியோருக்கு மன்னார்குடி மேகஅக்ரி கிளினிக்&மேகாமெஷின்ஸ் உரிமையாளர் எஸ்.புவனேஸ்வரி வேளாண் தொழில்முனைவு பயிற்சியளித்தனர். 

    விவசாயத்தில் உயர் விளைச்சலுக்கான நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், தனிமனித வளர்ச்சி,  நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் வேளாண் தொழில் முனைவோர் பங்களிப்பது  குறித்து கேட்டறிந்தனர்.
     
    மேலும் இந்திய வேளாண் அமைச்சகம் வழங்கும் வேளாண் பட்டதாரிகளுக்கான சிறப்பு பயிற்சிகளைப் பெற்று  சிறந்த தொழில் முனைவோராவது பற்றியும் கேட்டறிந்தனர்.

    மன்னார்குடியில் தொடங்கப்பட்ட  மேகா நிறுவனத்தில் அனைத்து பயிர்களுக்கான விதைகள், நுண்ணுயிர் உரங்கள், இரசாயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் அனைத்து நவீன வேளாண் இயந்திரங்களை கோயம்புத்தூர் மற்றும் கும்பகோணத்திலும் விற்பனை செய்து வருகிறது.
    Next Story
    ×