search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    கொள்முதல் நிலையங்களில் நெல் அளவிடப்படாமல் இருப்பதால் விவசாயிகள் கவலை

    10,000 நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் அளவிடப்படாமல் இருப்பதாக விவசாயிகள் பரபரப்பு புகார் கூறியுள்ளனர்.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டார பகுதிகளில் கடநத ஆண்டு 1000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. 


    இதில் பருவமழை கை கொடுத்த காரணத்தால்  விவசாயிகள்  அமோக விளைச்சலை கண்டனர். தற்போது அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். 

    இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தொடர்ச்சியாக புகார் செய்து வருகின்றனர். 

    கரூர் வீரராக்கியம் நெல் கொள்முதல் நிலையத்தில் 7000-க்கும் மேற்பட்ட மூட்டை நெல்மணிகள் அளவிடப் படாமல் கொள்முதல் நிலையத்துக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை விவசாயிகள் டார்ப்பா கொண்டு மூடி பாதுகாத்து வருகின்றனர். 

    இதுபற்றி வீரராக்கியம் பகுதியை சேர்ந்த விவசாயி எஸ்.கே.பழனிச்சாமி என்பவர் கூறும்போது, சுமார் 8 ஆயிரம் நெல்  மூட்டைகள் அளவிடப்படாமல் வீரராக்கி யம் நெல்கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள் ளன. 

    இதுபோன்ற பிரச்சி னைகள் நச்சலூர், நங்கா வரம், பணிக்கம்பட்டி மற்றும் இதர நெல்கொள்முதல் நிலையங்களிலும் உள்ளன. மாவட்டம் முழுவதும் 10000-க்கும்  மேற்பட்டநெல் மூட்டைகள் அளவிடப் படாமல், கொள்முதல்செய் யாமல், அரிசி ஆலை களுக்கு அனுப்பாமல் வைக்கப் பட்டுள்ளது. 

    இதனால் விவசாயிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஆகவே பாதுகாப்பற்ற  முறையில் வெளியில் அடுக்கி  வைக்கப் பட்டுள்ள நெல் மூட்டைகளை அளவிட்டு ஆலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×