search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை செய்துகொண்ட சங்கீத் குமார்.
    X
    தற்கொலை செய்துகொண்ட சங்கீத் குமார்.

    கார் ஷோரூம் நிர்வாகிகள் மிரட்டியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    கார் ஷோரூம் நிர்வாகிகள், சங்கீத்குமாரை கடுமையாக திட்டியதுடன், கார் சேதமானதற்கு பணம் கேட்டு மிரட்டி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பிடுங்கி வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
    பல்லடம்

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள முத்தூர் கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் சங்கீத் குமார்(வயது 21). இவர் தற்போது ஆறுமுத்தாம்பாளையம் பண்ணைக்காடு தோட்டம் பகுதியில் ஈஸ்வரி காம்பவுண்ட் பகுதியில் தங்கிக்கொண்டு பல்லடம் அருகே உள்ள குங்குமம்பாளையத்தில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான கார் ஷோரூமில் வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு “டெமோ “ காரை எடுத்துக்கொண்டு பல்லடத்தில் இருந்து சொந்த ஊருக்குச் சென்றதாகவும், திரும்பி வரும்போது ஏற்பட்ட சிறிய விபத்தில் கார் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கார் ஷோரூம் நிர்வாகிகள்,சங்கீத்குமாரை கடுமையாக திட்டியதுடன், கார் சேதமானதற்கு பணம் கேட்டு மிரட்டி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பிடுங்கி வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த அவர் அவரது தந்தைக்கு செல்போன் மூலம் சொல்லி விட்டு,தான் தங்கியிருந்த வீட்டின் மேற்கூரை விட்டத்தில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

    சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக சங்கீத்குமாரின் தந்தை முத்துக்கருப்பன் கொடுத்த புகாரின் பேரில் கார் ஷோரூம் நிர்வாகிகள் பொள்ளாச்சி சின்னாம்பாளையத்தை சேர்ந்த பத்மகுமார்,கோயமுத்தூர் சுந்தராபுரத்தை சேர்ந்த கதிரேசன், சேலம் மாமாங்கம் அண்ணா நகரைச் சேர்ந்த ஹரிஹரன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×