search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நான் முதல்வன் திட்டத்தை பெரிய திரையில் மாணவிகளுக்கு ஒளிபரப்பு
    X
    நான் முதல்வன் திட்டத்தை பெரிய திரையில் மாணவிகளுக்கு ஒளிபரப்பு

    பேராவூரணி அரசு பள்ளியில் ‘நான் முதல்வன்’ திட்ட நேரடி ஒளிபரப்பு

    பேராவூரணி அரசு மகளிர் பள்ளியில் ‘நான் முதல்வன்’ என்ற புதிய திட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த நான் முதல்வன் புதிய திட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வெற்றியாளராகும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல்வன் திட்டத்தின் நோக்கம் ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவியல் சிந்தனையில், ஆற்றலில் திறனை மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.

    தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ& மாணவிகளுக்கு கோடிங் மற்றும் ரொபாட்டிக்ஸ் போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்களை கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். 

    இதைத் தவிர மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகளில் உட்கொள்வது குறித்து ஆலோசனை வழங்குவதுடன் உடற்பயிற்சி, நடை, உடை, நாகரீகம், மக்களோடு பழகுதல் ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும். தமிழர் பண்பாடு, மரபு சார்ந்த விழிப்புணர்வை மாணவ-மாணவிகளிடம் ஏற்படுத்தப்படும்.

    இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகள் 672 பேர் பார்த்தனர். முன்னதாக தலைமையாசிரியர் சாந்தி அறிவுறுத்தலின் பேரில், உதவி தலைமையாசிரியர் சுப.கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
    Next Story
    ×