search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறை
    X
    சிறை

    சேலம் கோர்ட்டில் கத்தியால் குத்தப்பட்ட நீதிபதிக்கு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை- கைதான ஊழியர் சிறையில் அடைப்பு

    சேலம் கோர்ட்டில் கத்தியால் குத்தப்பட்ட நீதிபதிக்கு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வருபவர் பொன்பாண்டி (வயது45).

    இவர் நேற்று காலை நீதிமன்றத்தில் உள்ள தனது அறைக்குச் சென்று வழக்குத் தொடர்பான ஆவணங்களைப் படித்து கொண்டிருந்தார்.

    அப்போது அவரது அறைக்குள் நுழைந்த சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் பகுதியைச் சேர்ந்த நீதிமன்ற அலுவலக உதவியாளர் பிரகாஷ் (37), தான் ஓமலூர் நீதிமன்றத்திலிருந்து மேட்டூர் நீதிமன்றத்துக்கு பணிமாறுதல் கேட்டிருந்த நிலையில், திடீரென சேலம் நீதிமன்றத்துக்கு இடம் மாற்றிவிட்டதாக முறையிட்டார்.

    அதுகுறித்து மாவட்ட நீதிபதியிடம் சென்று முறையிடுமாறு நீதிபதி பொன்பாண்டி அறிவுறுத்தினார். அதை ஏற்க மறுத்த பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பொன்பாண்டியைக் குத்தினார். காயமடைந்த நீதிபதி சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற அலுவலக உதவியாளர் பிரகாஷை கைது செய்து ஓமலூர் சிறையில் அடைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்பாண்டியை மாவட்ட நீதிபதி குமரகுரு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பணியாற்றும் நீதிபதிகள் அனைவரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    Next Story
    ×