search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    டெல்டா மாவட்டங்களில் பதிவான வாக்குப்பதிவு சதவீதம்

    நகர்புற உள்ளாட்சி தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் பதிவான வாக்குப்பதிவு சதவீதம் - அதிகபட்சமாக தலைஞாயிறு பேரூராட்சியில் 83-.91 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
    தஞ்சாவூர்: 

    தமிழகத்தில் நேற்று நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 61 சதவீத வாக்குகள் பதிவாகின.

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை மாநகராட்சியில் 61 சதவீதமும், கும்பகோணம் மாநகராட்சியில் 65 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.

    பட்டுக்கோட்டை நகராட்சியில் 66 சதவீதமும், அதிராம்பட்டினம் நகராட்சியில் 63 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இதேப்போல் 20 பேரூராட்சிகளில் பதிவான வாக்குசதவீதம் வருமாறு:&

    ஆடுதுறை பேரூராட்சியில் 71 சதவீதம் வாக்குகளும், அம்மாபேட்டை 71, அய்யம்பேட்டை 60, சோழபுரத்தில் 69, மதுக்கூரில் 64, மேலதிருப்பந்துருத்தியில்  72, மெலட்டூரில் 76, ஒரத்தநாட்டில் 74, பாபநாசத்தில் 72, பேராவூரணியில் 74, பெருமகளூரில் 83, சுவாமிமலையில் 79, திருக்காட்டுபள்ளியில் 77, திருநாகேஸ்வரத்தில் 73, திருப்பனந்தாளில் 74, திருபுவனத்தில் 71, திருவையாறில் 75, திருவிடைமருதுரில் 67, வல்லத்தில் 76, வேப்பத்தூர் பேரூராட்சியில் 79 சதவீத வாக்குகளும் பதிவாகின.

    இதன் மூலம் மாவட்டத்தில் 2 மாநகராட்சி, 2 நகராட்சி, 20 பேரூராட்சிகளிலும் சேர்த்து சராசரியாக 66.12 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

    திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகராட்சியில் 65.52 சதவீதமும், மன்னார்குடி நகராட்சியில் 64.16 சதவீதமும், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 81.22 சதவீதம் வாக்குகளும், கூத்தாநல்லூர் நகராட்சியில் 63.03 வாக்குகளும் பதிவாகின. 
    இதேப்போல் பேரூராட்சிகளில் பேரளம் 80.88 சதவீதம்,  நன்னிலம் 77, குடவாசல் 72.81, கொரடாச்சேரி 76.25, வலங்கைமான் 76.84, நீடாமங்கலம் 76.81, முத்துப்பேட்டை 63.21 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதன் மூலம் மாவட்டத்தில் சராசரியாக 68.25 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    நாகை மாவட்டத்தில் நாகை நகராட்சியில் 63.73 சதவீதமும், வேதாரண்யம் நகராட்சியில் 75.51 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. கீழ்வேளூர் பேரூராட்சியில் 74.70 சதவீதம், வேளாங்கண்ணி பேரூராட்சியில் 81.85 சதவீதம்.
    அதிக வாக்குகள் தலைஞாயிறில் 83.91, திட்டச்சேரியில் 66.09 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. மாவட்டத்தில் சராசரியாக 69.19 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை நகராட்சியில் 62.61 சதவீதம், சீர்காழி நகராட்சியில் 67.54 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இதேப்போல் குத்தாலம் பேரூராட்சியில் 66.32 சதவீதம், மணல்மேட்டில் 73.72 சதவீதம், தரங்கம்பாடியில் 66.41, வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் 78.91 சதவீதம் என மாவட்டத்தில் 65.77 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.
    Next Story
    ×