search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    குடற்புழு நீக்கம் செய்யாவிட்டால் மாடுகளுக்கு பால் உற்பத்தி திறன் பாதிக்கும் - கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கை

    பசு, எருது, செம்மறியாடுகளுக்கு கருவூட்டல், சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம் உள்ளிட்ட பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
    அவிநாசி:

    அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி தேவம்பாளையம் கிராமத்தில் கால்நடைகள் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. 

    இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை திருப்பூர் கோட்ட உதவி இயக்குனர் பரிமளராஜ்குமார் தலைமை வகித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கி பேசுகையில்,

    மாடுகளுக்கு சரியான சமயத்தில் குடற்புழு நீக்கம் செய்யாவிட்டால் அவற்றின் பால் உற்பத்தி திறன் பாதிக்கும். சினை பிடிக்கும் காலம் தள்ளிப்போகும். சரியான இடைவெளியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார். 

    பழங்கரை ஊராட்சி மன்ற தலைவர் கோமதி, உறுப்பினர்கள் சண்முகம், கவுரி முன்னிலை வகித்தனர்.

    பசு, எருது, செம்மறியாடுகளுக்கு கருவூட்டல், சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம் உள்ளிட்ட பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மாடுகளுக்கு சத்துமாவு வழங்கப்பட்டது. 

    கால்நடை மருத்துவர்கள் சுரேஷ், ராமசந்திரன், சோபியா ஆகியோர் மாடுகளுக்கு சிகிச்சை வழங்கினர். சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசு, சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
    Next Story
    ×