search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    நிலக்கடலை விளைச்சலை அதிகரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி

    குமரகுரு வேளாண் கல்லூரி மாணவிகள் , நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புமுறை குறித்து வரைபடம் மூலம் விளக்கினர்.
    அவிநாசி:

    அவிநாசி வட்டாரத்தில் மானாவாரி பயிராக 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், விளைச்சலை பெருக்கவும் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் கதிரவன் பங்கேற்று, எண்ணெய் வித்து பயிர்களில் நீர், களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி செய்தல், மதிப்புக்கூட்டிய பொருட்களாக விற்பனை செய்தல் மூலம் கூடுதல் வருமானம் பெறுவது குறித்து பயிற்சிஅளித்தார்.

    தேசிய உணவு பாதுகாப்புத்திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன், உற்பத்தியை அதிகரிக்க செய்யும் உயர் விளைச்சல் ரகங்கள், விதை நேர்த்தி, கோடை உழவு செய்தல், ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரித்து இடுதல் உள்ளிட்ட தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினார். 

    அவர் கூறுகையில்,  

    மானாவாரியில் நிலக்கடலை விளைச்சலுக்கு  ஊட்டமேற்றிய தொழு உரம் நல்ல பலன் தருகிறது. மண் வளம் மேம்படுகிறது. இதன் மூலம் 30 சதவீதம் அதிக மகசூல் பெற முடியும் என்றார். தேசிய உணவு பாதுகாப்பு திட்ட தொழில்நுட்ப உதவியாளர் கிருத்திகா, உயிர் உர பயன்பாடு, விதை நேர்த்தி குறித்து பேசினார்.

    அவிநாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு, மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார். அவிநாசி வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் மஞ்சு உள்ளிட்ட பலர் பேசினர். ஈரோடு, குமரகுரு வேளாண் கல்லூரி மாணவிகள், நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புமுறை குறித்து வரைபடம் மூலம் விளக்கினர். ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அவிநாசி வட்டார வேளாண்மை அலுவலர் சத்யா, உதவி வேளாண் அலுவலர்கள் சுரேஷ் மற்றும் ‘அட்மா’ திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×