search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் விஷ்ணு
    X
    கலெக்டர் விஷ்ணு

    நெல்லையில் கலப்பட வெல்லம் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிமுகம்-கலெக்டர் விஷ்ணு தகவல்

    நெல்லை மாவட்டத்தில் கலப்பட வெல்லம் விற்பனை செய்வது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க புதிய வாட்ஸ்-அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    உணவு பாதுகாப்பு தரச்சட்டம் 2006-ல் ஒழுங்குமுறைகளின்படி வெல்லம் தயாரிக்க தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி கலப்படம் இல்லாத வெல்லம் அடர் அரக்கு நிறமாக இருக்கும்.

    ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, வெளிர் மஞ்சள், அடர் மஞ்சள் நிறத்திலுள்ள வெல்லத்தில் செயற்கை வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் அதை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

     உணவிற்காக வெல்லம் வாங்கும் போது அடர் அரக்கு நிற வெல்லத்தையே வாங்கிட வேண்டும். வேதிப்பொருட்கள் கலந்த வெல்லத்தை பொதுமக்கள் சாப்பிடும் போது வயிற்றுப்போக்கு, சிறுநீரக கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

    உணவு பொருட்கள் தரம் மற்றும் கலப்படமான வெல்லம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் வாயிலாக புகார் தெரிவிக்கலாம். புகார்தாரர் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×