search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் விசாரணை
    X
    போலீஸ் விசாரணை

    தஞ்சையில் தற்கொலை செய்த மாணவி லாவண்யாவின் தாத்தா - பாட்டியிடம் கோவையில் விசாரணை

    தஞ்சையில் தற்கொலை செய்த மாணவியின் தாத்தா- பாட்டியிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
    கோவை:

    தஞ்சையை சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு வி‌ஷம் குடித்து இறந்தார்.

    மாணவின் தற்கொலைக்கு மதமாற்றம் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து பாரதிய ஜனதா, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த மாணவியின் பாட்டி நித்யானந்த சரஸ்வதி என்பவர் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

    அந்த பேட்டியில் அவர், லாவண்யாவின் தாய் 8 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அதன்பிறகு தஞ்சையில் உள்ள பள்ளி விடுதியில் தங்க வைக்கப்பட்டார். கடந்த ஆண்டு அவரது சித்தி லாவண்யாவின் கன்னத்தில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாக மாணவியின் தோழிகள் தனக்கு தெரிவித்தார்கள்.

    எனவே நான் சம்பவம் குறித்து சைல்டு ஹெல்ப்லைனுக்கு தகவல் தெரிவித்தேன். சைல்டுலைன் ஊழியர்கள் சிறுமியை சந்தித்தபோது சித்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார் என தெரிவித்து இருந்தார்.

    இந்த பேட்டியை தொடர்ந்து தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா, இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

    அவர்கள் சரவணம்பட்டி எழில் நகருக்குச் சென்று நித்யானந்த சரஸ்வதியையும், அவரது கணவரையும் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். 30 நிமிடங்கள் அவரிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில் மாணவின் உறவினர் திருப்பூர் பனியன் கபெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருவதாகவும், அவர் மாணவி இறப்பதற்கு முன்பு அவரை சந்தித்து பேசியுள்ளார். அவரிடம் விசாரித்தால் கூடுதல் தகவல் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். பின்னர் அவர் யூடியூப் சேனலில் கூறியதை போலீசார் வாக்குமூலமாக வீடியோ எடுத்தனர்.

    அப்போது நித்யானந்த சரஸ்வதி தனக்கு தலைசுற்றுவதாக அதிகாரிகளிடம் கூறினார். உடனடியாக, அவரது மகன் அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதையடுத்து போலீசார் தேவை பட்டால் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என அவரிடம் தெரிவித்தனர்.
    Next Story
    ×