search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் போலீசில் ஒப்படைக்க வேண்டும்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் போலீசில் ஒப்படைக்க வேண்டும் என கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான சாதாரண தேர்தல் அட்ட வணை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

    தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதன் அடிப்படையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தும் பொருட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள படைக்கல உரிமம் பெற்ற அனைத்து படைக்கல உரிமதாரர்களும் தங்கள் வசம் வைத்துள்ள உரிமம் பெற்ற துப்பாக்கியை அருகிலுள்ள போலீஸ் நிலைய பொறுப்பு அலுவலரிடம் தவறாது உடனடியாக ஒப்படைக்க வேண்டும். 

    தேர்தல் காலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத் தால் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 பிரிவு 144-ன் படி துப்பாக்கி உரிமம் பெற்ற உரிமதாரர்கள் துப்பாககியை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
     
    எனவே துப்பாக்கி உரிமை தாரர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் உடனடியாக துப்பாக்கியை ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு செய்யாமல் பதுக்கி வைத்திருந்தால் அத்தகைய நபர்கள் மீது சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையங்களில் ஒப்படைப்பில் வைக்கப்படும் படைக்கலன்கள் தேர்தல் பணிகள் முடிவுற்ற பின்னர் சம்பந்தப்பட்ட உரிமதாரர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
    Next Story
    ×