search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் பெண் வாக்காளர்கள் அதிகம்

    நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
    பூதலூர்: 

    தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் தேதி மாநில
    தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 19-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 
    மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 685, இதில் ஆண் வாக்காளர்கள் 5233, பெண் வாக்காளர்கள் 5452.

    வேட்பு மனுக்கள் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் காலை 
    10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும். இதற்கிடையே  அறிவிப்பின்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது. 

    வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 4 என்றும், வேட்பு பரிசீலனை 5-ந்தேதி என்றும், வேட்பு மனுக்கள் வாபஸ் பெற 7-ந்தேதி கடைசி நாள் என்றும் குறிப்பிட்டு இருந்தது.

    வாக்குப் பதிவு நாள், வாக்கு எண்ணிக்கை நாள், பதவி ஏற்பு நாள், மறைமுக தேர்தல் நாள் எல்லாம் குறிப்பிடப்பட்டு இருந்தது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு குறித்து அறிவிப்பு ஏதும் மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் இல்லை. 

    இது தொடர்ந்து தேர்தல் கால அறிவிப்புகளை பார்த்து வரும் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடாமல் தேர்தல் நடத்தப் போகிறார்களா? என வியப்பில் ஆழ்ந்து உள்ளனர்.
    Next Story
    ×