search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கொரோனா பாதிப்பு 593 ஆக குறைந்தது

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 593 ஆக குறைந்ததுள்ளது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கு மேல் சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. 

    நேற்று தினசரி பாதிப்பு 804 ஆக இருந்த நிலையில் இன்று பாதிப்பு 593 ஆக குறைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 303 பேர் ஆண்கள் 290 பேர் பெண்கள் ஆவார்கள். 33 குழந்தைகளும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 386 ஆக உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்திற்கு வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு களப்பணியாளர்கள் மூலமாக கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

    நேற்று மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் வெளியூரிலிருந்து வந்த 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து வந்த 4 பேருக்கும், கேரளாவிலிருந்து வந்த 3 பேருக்கும், விழுப்புரம், கடலூர், ராமநாதபுரத்தில் இருந்து வந்தவர்களுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. 

    நாகர்கோவில் நகரில் பாதிப்பு தினமும் குறைந்து வருகிறது. இன்று 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

    அவர்கள் வசித்து வரும் பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் இன்று 77 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

    தனியார் மருத்துவமனையில் 275 பேரும், வீட்டு தனிமை யில் 4 ஆயிரத்து 567 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 

    அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குமரி மாவட்டம் முழுவதும் நேற்று 224 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 895 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும், 421 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் இதுவரை 11 லட்சத்து 99 ஆயிரத்து 980 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 9 லட்சத்து 38 ஆயிரத்து 638 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 5,566 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 

    15 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவி களுக்கும் தடுப்பூசி போடப் பட்டு வருகிறது. மொத்த முள்ள 74 ஆயிரத்து 165 பேரில் 72 ஆயிரத்து 333 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
    Next Story
    ×