search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    திருச்சி மாவட்டத்தில் 23 இடங்களில் 20 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

    திருச்சி மாவட்டத்தில் 23 இடங்களில் 20 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது
    திருச்சி:

    தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19&ந் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகள் என்று 20 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள், லால்குடி நகராட்சியில் 24, முசிறி நகராட்சியில் 24, மணப்பாறை நகராட்சியில் 27, துறையூர் நகராட்சியில் 24, துவாக்குடி நகராட்சியில் 21 வார்டுகள் என்று 5 நகராட்சிகளில் 120 வார்டுகள் உள்ளன.

    பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளூர், எஸ்.கண்ணணூர், சிறுகமணி, தாத்தையங்கார் பேட்டை, தொட்டியம், உப்பிலியாபுரம் ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள், கூத்தப்பர், மண்ணச்சநல்லூர் பேரூராட்சிகளில் தலா 18 வார்டுகள் என்று மொத்தம் 14 பேரூராட்சிகளில் 216 வார்டுகள் உள்ளன.

    மாவட்டத்தில் 20 நகர்ப்புற உள்ளாட்சிகளில் மொத்தம் 401 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான கவுன்சிலர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. திருச்சி மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு, பொன்லை, ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகங்கள் என்று 4 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

    மணப்பாறை, துவாக்குடி, துறையூர், லால்குடி, முசிறி நகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கு அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

    பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர், கூத்தப்பார், மண்ணச்சநல்லூர், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளூர், எஸ்.கண்ணனூர், சிறுகமணி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, உப்பிலியாபுரம் ஆகிய 14 பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கு அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

    அந்தந்த அலுவலகங்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனுக்களை பெற்றுக் கொள்வார்கள். வேட்பு மனு தாக்கல் படிவங்களை இணைதளத்திலும், அந்தந்த அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.

    வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் மற்றும் முன்மொழிபவர் என்று 2 பேருக்கு மட்டுமே அனுமதி, இரு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே போன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தேர்தல் திருவிழா சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
    Next Story
    ×