search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சேலம் மாநகராட்சியில் பெண்களுக்கு 30 வார்டுகள்

    60 வார்டுகள் கொண்ட சேலம் மாநகராட்சி தேர்தலில் பெண்களுக்கு 30 வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
    சேலம்:

    தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.  சேலம் மாநகராட்சியில் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் தொடங்கி உள்ளன. அதன்படி  முதற்கட்டமாக இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

    இதனை தொடர்ந்து  நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக,   வார்டுகளுக்கான  இடஒதுக்கீடு விபரம்  இடம் பெற்ற அறிவிப்பினை சேலம் மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.  சேலம் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன.  

    இதில் தாழ்த்தப்பட்ட வகுப்புக்கு ( எஸ்.சி. பொது) 8, 12, 20, 44 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.    மேலும் தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண்களுக்கு 17, 19, 45, 47 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  பட்டியலின பழங்குடியினருக்கு  (எஸ்.டி. பொது), வார்டுகள் ஒதுக்கப்படவில்லை. அதுபோல் பட்டியலின பழங்குடி பெண்களுக்கும் (எஸ்.டி. பெண்கள்) வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.


    பெண்களுக்கு (பொது) 4, 5, 7, 10, 11, 15, 16, 23, 24, 25, 27, 29, 30, 32, 33. 35, 39, 40, 41, 42, 46, 48, 49, 53, 54, 55 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.   கடந்த 2019 ம் ஆண்டு மே மாதம் 24 ம் தேதி சேலம் மாவட்ட அரசிதழ் எக்ஸ்ட்ராடனரியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதே அறிவிப்பு தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிக்கையின்படி  சேலம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் பெண்கள் பொதுவில் 26 வார்டுகளும், தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண்களுக்கு 4 வார்டுகளும் என  30 வார்டுகள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

     இதனால் மாநகராட்சியில்  பெண்களுக்கு சரிசமமாக வார்டுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 வார்டுகளில்  இடஒதுக்கீடு போக அனைவரும் போட்டியிடலாம். அதாவது இட ஒதுக்கீடு போக மற்ற வார்டுகளில்  தாழ்த்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்பட அனைத்து வகுப்பினரும் போட்டியிடலாம்.
    Next Story
    ×