search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஊரடங்கு நாளில் மதுபாட்டில் பதுக்கிய 71 பேர் கைது

    கோவையில் பதுக்கி வைத்து விற்கப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன
    கோவை:

    கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தடையை மீறி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்க எடுக்கப்படும் என போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. 

    இந்தநிலையில் மாநகர் முழுவதும் போலீசார் ரோந்து சென்று மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை செய்தனர். 

    இந்த சோதனையில் வெள்ளலூர், கமலா குட்டை மில், பாப்ப நாயக்கன்பாளையம் காய்கறி மார்க்கெட், வெங்கிட்டாபுரம், பூ மார்க்கெட், போத்தனூர் சாரதா மில்ரோடு, தடாகம் ரோடு, கோவில்மேடு, ரத்தினபுரி, கே.கே. நகர், அம்மன் குளம், புலியகுளம், அமுல் நகர், ஒண்டிப்புதூர், பீளமேடு, கணபதி ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை  செய்த 22 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 198 மது பாட்டில்கள், ரூ.1,670 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதே போல கோவை புறநகரில் பெரிய நாயக்கன் பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சப்-டிவிசனுக்குட்பட்ட போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 837 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    இதனை பதுக்கி வைத்து விற்பனை செய்த 49 பேரை போலீசார் கைது செய்தனர். மொத்தமாக மாவட்டம் முழுவதும் 71 பேர் கைது செய்யப்பட்டு, 1,035 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 
    Next Story
    ×