search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்தபடம்
    X
    கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்தபடம்

    காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    திருச்சி :

    திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த முத்தம்பட்டி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன், ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ காமாட்சி, பெரியண்ணன், ஸ்ரீ மதுரை வீரன் ஸ்ரீ ஆகிய பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றன.

    பணிகள்  முடிவடைந்த நிலையில் காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து  வந்து, இரண்டு நாட்களாக பூஜை களுடன், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கன்யா பூஜை, பிம்ப ரக்ஷாபந்தனம், நாடி சந்தனம், திரவ்ய ஹோமம் பூர்ணாகுதி ஆகியவற்றோடு யாகம் நடத்தப்பட்டது.

    பின்னர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து மூல லாயத்தில்  அபிஷேகமும், தீபாராதனையும் காட்டப்பட்டன. விழாவில்  முத்தம்பட்டி, மேட்டுப்பட்டி, சோளம்பட்டி, கஸ்தூரிப்பட்டி, பெருகனூர், பைத்தம்பாறை, அம்மன்குடி, வேங்காம்பட்டி,   சுக்காம்பட்டி, வடுகப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×