என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  போதையில் தந்தையை கத்தியால் குத்திய மகன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுக்கடை அருகே போதையில் தந்தையை கத்தியால் குத்திய மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
  நாகர்கோவில்:

  புதுக்கடை அருகே தவிட்டவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெரோன்ஸ் (வயது 49). கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஜோஸ் மெர்லின் (21). குடிப்பழக்கத்திற்கு  அடிமையானவர்.

  சம்பவத்தினத்தன்று ஜெரோன்ஸ் வேலை முடித்து வீட்டிற்கு சென்றார். அப்போது போதையில் இருந்த ஜோஸ் மெர்லின் தந்தையை தகாத வார்த்தைகளால் பேசி, கையில் வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார்.

  இதை ஜெரோன்ஸ் தடுத்தபோது, அவரது இடது கையில் குத்து விழுந்து ரத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து தந்தைக்கு மகன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

  இதில் காயமடைந்த ஜெரோன்ஸ் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×