என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  முழு ஊரடங்கு-கோவையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
  கோவை:

  கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று 3&வது வாரமாக கோவையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

  கோவை டவுன்ஹால், பெரிய கடை வீதி, சாய்பாபா காலனி, சிங்காநல்லூர், காந்திபுரம், ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட்  ரோடு, 100 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  ஜவுளி, நகைக்கடைகள், செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், செல்போன் கடைகள், எலக்ட்ரிக் கடைகள், இருசக்கர வாகன உதிரிபாக விற்பனை கடைகள் அனைத்தும் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந் தன. இதனால் அந்த பகுதியே வெறிச்சோடியது.

  பொள்ளாச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி& திருப்பூர் சாலை, மேட்டுப்பாளையம்& ஊட்டி சாலை, கோவை& மேட்டுப்பாளையம் சாலை உள்பட முக்கிய சாலைகள் அனைத்தும் இன்று வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட் டது. அத்தியாவசிய தேவை களுக்கு மட்டுமே சிலர் வெளியில் வந்ததை பார்க்க முடிந்தது.

  மாவட்டத்தில் உள்ள மளிகை கடைகள், காய்கறி கடைகள், மார்க்கெட்டுகள், உழவர்சந்தைகள் என மக்கள் கூடும் இடங்கள் எல்லாம் மூடப்பட்டு அந்த பகுதி ஆட்கள் நடமாட்டம் இன்றி இருந்தது. அத்தியாவசிய கடைகளான மருந்து கடைகள், பாலகங்கள் மட்டும் திறந்திருந்தன. 

  காலையில் பாலகங் களுக்கு பொதுமக்கள் வந்து பால் பாக்கெட்டுகளை வாங்கி சென்றனர். அதன் பின்னர் சாலைகளில் ஆட்கள் நடமாட்டம் குறைந்து விட்டது. முழு முடக்கம் காரணமாக மக்கள் அனை வரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

  ஊரடங்கு விதிமுறை களை மீறுபவர்களை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.         மாநகரில் 700 போலீசார்,   புறநகரில் 300 பேர்  என      மொத்தம் 1000 போலீசார்  23 ஜீப்கள், 44 மோட்டார்சைக்கிள் களில் மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகள், தெருக் கள் என பல பகுதிகளிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

   முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்தும், 45 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்தும் கண்காணிப்பை தீவிரப் படுத்தினர். அந்த வழியாக வாகனங்களில் வந்தவர் களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

  உரிய காரணங்கள் கூறியவர்களை மட்டுமே விசாரித்து விட்டு அனுப்பினர். தேவையின்றி வெளியில் வந்தவர்களை பிடித்து எச்சரித்து, வாகனத்தை பறிமுதல் செய்ததுடன், அபராதமும் விதித்தனர். 

  இதேபோல் தமிழக& கேரள எல்லையான பொள்ளாச்சி மீனாட்சிபுரம், கோபாலபுரம், ஆனைகட்டி, வேலந்தாவளம், வாளையார் உள்ளிட்ட எல்லை பகுதிகளிலும்   கண் காணிப்பு பணி தீவிரமாக நடந்தது. 
  கேரளாவில் இருந்து வந்த வாகனங்கள் மற்றும் இங்கிருந்து கேரளாவுக்கு செல்லக்கூடிய வாகனங் களையும் தீவிர சோத னைக்கு பின்னரே அனுமதிக் கின்றனர். அவர்களிடம் என்ன காரணங்களுக்காக செல்கிறீர்கள் என்பதை விசாரிக்கின்றனர்.

  பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள நெகமம், கிணத்துக்கடவு, வால்பாறை பகுதிகளிலும் முக்கிய கடைவீதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. சாலை களும் போக்குவரத்தின்றி வெறிச்சோடியே காணப் பட்டது. மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதிகளிலும் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.
  Next Story
  ×