என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  டி.கே.மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்.
  X
  டி.கே.மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்.

  கோவையில் உழவர்சந்தைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
  கோவை:

  தமிழகத்தில் கொரொனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

  மேலும் கடந்த 2 வாரங்கள் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நாளை 3&வது வாரமாக ஞாயிற்றுகிழமையும் அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

  நாளை   ஊரடங்கு என்பதால் கோவையில் உள்ள அனைத்து மளிகைக்கடைகள், காய்கறி கடைகளில் பொருட்கள் வாங்க இன்று மக்கள் குவிந்தனர். கோவை தியாகி குமரன் மார்க்கெட் மற்றும் சிங்காநல்லூர்,  ஆர்.எஸ் புரம், சுந்தராபுரம், வடவள்ளி உள்பட  உழவர் சந்தைகளில் காய்கறி வாங்க  மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
   
  நேரம் ஆக, ஆக காய்கறி கடைகள் மட்டுமல்லாமல் மளிகைக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்தது.  மேலும் நாளை ஊரடங்கு என்பதால் இறைச்சி கடைகளில் மக்கள் படை எடுத்தனர். மீன் வாங்குவதற்காக மக்கள் உக்கடம் மீன் மார்க்கெட்டிலும் குவிந்தனர். 

  கடைகளில் கோழி முட்டையும் அதிகளவு விற்பனை ஆனது. கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக  கண்காணித்தது. முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கி செல்ல ஒலிபெருக்கியில் அறிவுறுத்தினர். இதனால் கோவை சாலைகள் இன்று பரபரப்பாக காணப்பட்டது.

  இவ்வாறு அவர் கூறினார். 
  Next Story
  ×