search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்த காட்சி.
    X
    நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்த காட்சி.

    நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    திருவெறும்பூர் கிழக்குறிச்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
    திருச்சி :

    திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட கீழக்குறிச்சி   திருவெறும்பூர் தாலுக்கா பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளன. இப்பகுதியில் விளைவிக்கப்படும் நெல்லை வியாபாரிகள் மூலம் மட்டுமே விற்கப்படுவதால் போதிய விலை கிடைக்கவில்லை என்பதால் அரசே நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். 

    இந்நிலையில் தொகுதி விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, தற்போதைய தி.மு.க.  அரசு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழக்குறிச்சி பகுதியில்  அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அனுமதி அளித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து முதன் முதலாக  திருவெறும்பூர் அருகே உள்ள  கிழக்குருச்சியில் அமைக்கப்பட்டுள்ள அரசின் நேரடி நெல்கொள் முதல் நிலையத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் நெல் கொள்முதல் நிலையத்தில் முதன் முதலாக நெல் வழங்க வந்த விவசாயிகளிடமிருந்து அதிகாரிகள் நெல்லை எடைபோட்டு பெற்றுக்கொண்டனர்.
     
    நிகழ்சியில் விவசாயிகள் பொதுமக்கள் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக கலந்து  கொண்டனர்.  பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் தங்களது கோரிக்கை நிறை வேறாத பட்சத்தில் தற்போது கிழக்குறிச்சி பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அனுமதி அளித்த தமிழக முதல்வருக்கும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும்  கிழக்குறிச்சியை சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×