என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பூமி பூஜையை எம்.எல்.ஏ.மாணிக்கம் தொடங்கிவைத்த போது எடுத்தப்படம்.
  X
  பூமி பூஜையை எம்.எல்.ஏ.மாணிக்கம் தொடங்கிவைத்த போது எடுத்தப்படம்.

  2.5 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கான பூமி பூஜை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  2.5 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கான பூமி பூஜையை எம்.எல்.ஏ.மாணிக்கம் தொடங்கிவைத்தார்.
  கரூர்:

  குளித்தலை அருகே மருதூர், நங்கவரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 15&வது நிதிக்குழு மானிய நிதி திட்டத்தின் கீழ், மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளான மேட்டு மருதூர் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி, பணிக்கம்பட்டி பகுதியில் பேவர் பிளாக் அமைக்கும் பணி, பணிக்கம்பட்டி சந்தை பகுதியில் குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்தல், கருங்கல்பட்டி குளம் மேம்பாடு செய்தல் மற்றும் நங்கவரம் பேரூராட்சிக்குட்பட்ட கோவிந்தனூரில் மயானத்திற்கு செல்லும் வழியில்  பேவர் பிளாக் அமைக்கும் பணி மற்றும் மாடுவிழுந்தான் பாறையில் குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்தல் ஆகிய பணிகளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பீட்டில்  புதிய பணிகளுக்கான பூமி பூஜையை குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தொடங்கி வைத்தார். 

  இதனை தொடர்ந்து பேரூராட்சி பகுதிகளில் உள்ள மக்களிடம் பல்வேறு குறைகள் குறித்து கேட்டறிந்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார்.

  விழாவில் குளித்தலை ஒன்றிய செயலாளர் சூரிய னூர் சந்திரன், முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் வை.புதூர் பெரியசாமி,  ஒப்பந்தக்காரர் லயன் ராஜா என்கின்ற வெங்கடாஜலபதி, குளித்தலை நகர பொருளா ளர் தமிழரசன்,  மருதூர், நங்கவரம் பேரூராட்சி செயல் அலுவலர்கள், தி.மு.க. முக்கிய நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×