என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஏலகிரி மலையில் ரூ.4.93 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
  X
  ஏலகிரி மலையில் ரூ.4.93 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

  ரூ.4.93 கோடியில் உள்விளையாட்டு அரங்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏலகிரி மலையில் ரூ.4.93 கோடி மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி கலெக்டர் தொடங்கி வைத்தார்.
  ஜோலார்பேட்டை:

  திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. 

  ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலையில் உள்ள இளைஞர்கள் விளையாட்டுத் துறை சார்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்கவும் உடல் திறனை வளர்த்துக் கொள்ளவும் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. 

  அதனடிப்படையில் ஏலகிரி மலையில் உள்ள கொட்டையூர் கிராமத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, தொகுதி எம்எல்ஏ தேவராஜ் உள்ளிட்ட துறை அதிகாரிகள் உள் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக இடத்தை ஆய்வு செய்து உறுதி செய்தனர். 

  இதனையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் ரூபாய் 4.93 கோடியில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா, எம்எல்ஏக்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டி உள் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.

  இவ்விளையாட்டு அரங்கம் தரை தளம் 1084 சதுர மீட்டர் பரப்பளவிலும் பார்வையாளர்கள் அமர்வு தளம் 335 சதுர மீட்டர் பரப்பளவிலும் அமைக்கப்பட உள்ளது. இவ்விளையாட்டு அரங்கத்தில் பூப்பந்து மைதானம் 2 ஆண்கள் பெண்கள் வீரர்கள் ஒய்வு அறை, கழிவறைகள், பார்வையாளர்கள் அமர்வு, குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிக்காக சாய்வு தளம் போன்ற வசதிகள் அமைக்கபட உள்ளது.
  Next Story
  ×