என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  FILEPHOTO
  X
  FILEPHOTO

  விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது
  திருச்சி:

  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  பருவம் தவறிய பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  உடனே  நிவாரணம் வழங்க தி.மு.க. அரசை வலியுறுத்தி  நாளை (22&ந்தேதி, சனிக்கிழமை) காலை லால்குடி தாலுகாக அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 

  தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில்  நடைபெறும்  இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய,  நகர,  பகுதி, பேரூர், ஊராட்சி,   கிளைக்கழக நிர்வாகிகள்,  சார்பு  அணி நிர்வாகிகள், உள்ளாட்சி மட்டும்  கூட்டுறவு  சங்க  பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள், கட்சியினர் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

  திருச்சி  புறநகர்  வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி விடுத்துள்ள   அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  நிவாரணம்  வழங்க தி.மு-க. அரசை வலியுறுத்தி விவசாயிகளோடு இணைந்து நாளை (சனிக்கிழமை) காலை 10  மணி  அளவில் முசிறி கைகாட்டி அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
   
  இதில் தலைமைக் கழக நிர்வாகிகள்,  முன்னாள் அமைச்சர்கள்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
  Next Story
  ×