என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  கோவையில் காய்கறிகளுக்கு நடுவில் பதுக்கி 1 டன் புகையிலை பொருட்கள் கடத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காய்கறிகளுக்கு இடையே மறைத்து கடத்தி வரப்பட்ட 1 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
  கோவை:

  தமிழகத்தில் பான், குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சில வெளிமாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்து திருட்டுத்தனமாக விற்பனை செய்து வருகிறார்கள். இதனை போலீசார் ரோந்து சென்று பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

  இந்த நிலையில் கோவை குனியமுத்தூர் போலீசார் பாலக்காடு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். 

  அதில் 1 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காய்கறிகளுக்கு இடையே பதுக்கி வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வேனை ஓட்டி வந்த குனியமுத்தூர் குமரன் நகரை சேர்ந்த இபுராகிம் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.  பின்னர் அவரை குனியமுத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். 

  போலீசார் கடத்தி வரப்பட்ட வேன், 1 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

  மேலும் போலீசாரை பார்த்ததும் மரக்கடையை சேர்ந்த அப்பாஸ், அறிவொளி நகரை சேர்ந்த சுலைமான் ஆகியோர் தப்பிச்சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
  Next Story
  ×