search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்பூர் வழியாக ராட்சத லாரியில் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு செல்லப்பட்ட செயற்கைக்கோள் பாகம்.
    X
    ஆம்பூர் வழியாக ராட்சத லாரியில் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு செல்லப்பட்ட செயற்கைக்கோள் பாகம்.

    ராணுவ பாதுகாப்புடன் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு சென்ற செயற்கைக்கோள் பாகம்

    ஆம்பூர் வழியாக ராணுவ பாதுகாப்புடன் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு செயற்கைக்கோள் பாகம் லாரியில் கொண்டு செல்லப்பட்டது.
    ஆம்பூர்:

    பெங்களூர் வின்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவு தளத்துக்கு செயற்கை கோள் பாகம்  ராட்சஸ லாரியில் கொண்டு செல்லப்பட்டது. 

    நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து புறப்பட்ட இந்த செயற்கைக்கோள் பாகம் நேற்று ஆம்பூரை கடந்து சென்றது. மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற லாரியின் முன்னும் பின்னும் விஞ்ஞானிகள் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் துணை ராணுவ வீரர்கள் சென்றனர் மேலும் பஸ்களில் தமிழக போலீசாரும் பாதுகாப்பிற்கு அணிவகுத்து சென்றனர்.

    ஒரு சில இடங்களில் மின் கம்பங்கள் அருகாமையில் இருந்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு அவ்வழியாக இந்த செயற்கைக்கோள் கொண்டு செல்லப்படுவதாகவும் நாளை 21&ம் தேதி இந்த வாகனம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு சென்றடையும் என்று தெரிவித்தனர்.

    இந்த செயற்கைக்கோள் பாகத்தை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், கிராமமக்கள் வியப்புடன் பார்த்தனர்.
    Next Story
    ×