search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்தில்பாலாஜி
    X
    செந்தில்பாலாஜி

    உள்ளாட்சி தேர்தலில் அரசுடன் ஒத்துழைத்து பணியாற்றுபவர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் -அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு

    கோவையில் முடிவுற்ற திட்டப்பணிகள், நலத்திட்ட வழங்கும் விழா நடந்தது.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் 2,800 பெண்களுக்கு, ரூ.21 கோடியே 65 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி மற்றும் கோவை மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மேட்டுப்பாளையத்தில் நடந்தது. 

    விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:-

    கோவை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 39 திட்ட பணிகளுக்கு ரூ.24 கோடி நிதியை முதல்-அமைச்சர் வழங்கி உள்ளார். அதற்கான பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணிகள் முடிக்கப்பட்டு மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.  இன்று மட்டும் கோவையில் 2800 பெண்களுக்கு ரூ.21 கோடியே 65 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தாலிக்கு தங்கம் திட்டத்தின்கீழ் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    கோவை மக்கள் எப்பொழுதும் முதல்-அமைச்சருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். முதல்-அமைச்சரை பொருத்தவரை வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று வித்தியாசம் பார்க்காமல் 234 தொகுதிகளையும் தன்னுடைய தொகுதியாக நினைத்து அனைத்து தொகுதிகளுக்கும் ஒருசேர வளர்ச்சித் திட்டங்களை வழங்கி வருகிறார். 

    எனவே கோவை பகுதி மக்கள் வரக்கூடிய காலங்களில் குறிப்பாக உள்ளாட்சிகளில் மக்கள் பணியாற்ற கூடியவர்களையும், அரசுடன் ஒத்துழைத்து பணியாற்ற கூடியவர்களையும் தேர்வு செய்ய வேண்டும்.  அப்போது தான் அரசினுடைய திட்டங்களை விரைவாக கொண்டு வந்து சேர்ப்பதற்கு ஏதுவாக இருக்கும். எனவே அதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சமீரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் கூறுகையில், கோவையில் விடுபட்ட நகராட்சி, பேரூராட்சிகளின் வளர்ச்சிக்கான திட்டமதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நிதிபெற்று வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
    Next Story
    ×