என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பொன்மலை போலீசாரிடம் மனு கொடுக்க வந்த மேலகல்கண்டார்கோட்டை பகுதியினர்.
  X
  பொன்மலை போலீசாரிடம் மனு கொடுக்க வந்த மேலகல்கண்டார்கோட்டை பகுதியினர்.

  போலீஸ்காரர் மீது நடவடிக்கை கோரி மனு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமூக விரோதிகளுடன் தொடர்பு வைத்துள்ள போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

  திருச்சி:

  திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்த அர்ச்சுனன் நகர் மற்றும் சுவாமிநாதன் நகர் கிராம பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வந்து திருச்சி பொன்மலை கோட்டை காவல் உதவி ஆணையரிடம் மனு கொடுத்தனர்.

  அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

  எங்கள் பகுதியில் நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரராக ஒருவர் பணியாற்றி வருகிறார்.    அவர் மோசடி நபர்கள், கட்டபஞ்சாயத்து செய்பவர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் ஆகியோருடன் தொடர்பு வைத்துள்ளார்.

  மேலும் அவர் தீயகாரியங்களுக்கு துணை போவதால் எங்கள் பகுதி மக்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது.

  ஆகவே பொன்மலை காவல் உதவி ஆணையர் அந்த நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரரை வேறு இடத்திற்கு பணியிட மாறுதல் செய்து உத்தரவிட வேண்டும்.

  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
  Next Story
  ×