search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கோவில்களில் இன்று அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

    கும்பகோணம் அருகே திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோவிலில் தைப்பூசத்தையொட்டி நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சாவூர்:

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், வார கடைசி நாட்களில் வழிபாட்டு தலங்களை மூடவும் அரசு உத்தரவு பிறப்பித்தது.

    இந்நிலையில் பொங்கல் பண்டிகை, தைப்பூச நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபட முடியாத நிலை ஏற்பட்டது. இன்று அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் காலையிலேயே தங்கள் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் வழிபாட்டுக்காக குவிந்தனர்.

    தஞ்சை பெரியகோவில், அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில், கும்பகோணம் சாரங்கபாணி, சக்கரபாணி கோவில்கள், திருவாரூர் மாவட்டம் எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோவில், தியாகராஜர் கோவில், நாகை சிக்கல் சிங்கலரவேலவர், மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    கும்பகோணம் அருகே திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோவிலில் தைப்பூசத்தையொட்டி நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அரசு வழிகாட்டுதல்படி கோவிலுக்குள் குறைந்த அளவிலான பக்தர்களே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

    புகழ்பெற்ற ஸ்தலங்களில் பக்தர்கள் அதிகம் கூடியதால் உடனடியாக அங்கு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தபட்டனர்.    
    Next Story
    ×