என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மரணம்
  X
  மரணம்

  சேலம் கிச்சிப்பாளையத்தில் சோகம்- மோட்டார் சைக்கிளில் சென்ற மெக்கானிக் திடீர் மரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் கிச்சிப்பாளையத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்த மெக்கானிக் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சேலம்:

  சேலம் கிச்சிப்பாளையம் ஓந்தாப்பிள்ளை காடு பகுதியை சேர்ந்தவர் தில்லைநாயகம் வயது 68, மெக்கானிக். இவர் நேற்று மாலை எருமாபாளையம் முருகாகவுண்டர் காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை அவரது நண்பர் சுலைமான் என்பவர் ஓட்டி கொண்டிருந்தார்.

  அப்போது பேசிக்கொண்டிருந்தவர் திடீரென பேச்சை நிறுத்தியதுடன் சுலைமான் மீது சாய்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுலைமான் அக்கம் பக்கதத்தினர் உதவியுடன் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.

  சம்பவம் குறித்து கிச்சிப்பாளைளயம் போலீசார் விசாரித்த போது அவருக்கு மூளைக்கு செல்லும் ரத்த குளாயில் பிரச்சினை இருந்து வந்ததும், அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இறந்ததும் தெரிய வந்தது.

  Next Story
  ×