search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    திருச்சி மாநகராட்சியில் 11 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு

    கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநகராட்சியில் 11 தெருக்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.


    திருச்சி:

    திருச்சி மாநகாட்சி பகுதியில் ஜெட் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் மாநகரகரில் 2,197 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் கோ.அபிஷேகபுரம் கோட்டம் மற்றும் பொன்மலை கோட்ட பகுதிகள் அதிகமாகவும், கடுமையாகவும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் கோ. அபிஷேகபுரம் கோட்டத்தில் 896 பேருக்கும், பொன்மலையில் 610 பேருக்கும், ஸ்ரீரங்கத்தில் 495 பேருக்கும், அரியமங்கலத்தில் 196 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளன.

    இதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்த கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் ரெங்கா நகர் 7 ஆவது குறுக்குதெரு, சண்முகா நகர் 4 ஆவது குறுக்குதெரு, வடக்கு முத்துராஜா தெரு, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 8 தெருக்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதேபோன்று பொன்மலை கோட்டத்திலும் 3 பகுதிகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி  நகர்நல அலுவலர் யாழினி தெரிவித்தார். ஒரு தெருவில் 3 அல்லது 3&க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானால் அந்த பகுதியை தடைசெய்ய சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது.

    தற்போதைய நிலையில் 85 சதவீத கொரோனா தொற்றாளர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுகிறார்கள். ஆகவே அவர்கள் வெளியே செல்லாமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சி சுகாதாரத்துறையினர் கூறும்போது, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வைரஸ் பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள வீட்டு கழிவுகள் தனியாக தூய்மை பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

    கபசுர குடிநீர் தொடர்ச்சியாக வழங்கப்படுகிறது என்றனர்.  நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாநகராட்சி பகுதியில் சராசரியாக வார நாட்களில் 2000 முதல் 2500 பேரின் ரத்த, சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக யாழினி கூறினார்
    Next Story
    ×