என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பஞ்சு குடோனில் கொழுந்து விட்டு எரியும் தீ.
  X
  பஞ்சு குடோனில் கொழுந்து விட்டு எரியும் தீ.

  திருப்பூர் அருகே பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பஞ்சு குடோனில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
  திருப்பூர்:

  திருப்பூர் அடுத்த சாமளாபுரம் பல பாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்இவருக்கு சொந்தமான பஞ்சு குடோனை மங்கலத்தைச் சேர்ந்த ஜெய்வுலாதீன்(43) என்பவர் நடத்தி வந்தார்.பொங்கல் விடுமுறை என்பதால் குடோனில் யாரும் வேலை செய்யவில்லை.

  இந்தநிலையில் நேற்று மாலை குடோனில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது.சற்று நேரத்தில் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது.இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பல்லடம் மற்றும் சோமனூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேரமாக போராடி தீயை அணைக்க முயன்றனர். அனைத்தும் பஞ்சு மூட்டைகள் என்பதால் தீயை கட்டுக்குள் கொண்டு வர கடும் போராட்டம் நடத்தினர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை முழுமையாக அணைத்தனர். 

  இருந்தபோதிலும் பஞ்சி குடோனில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.  மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என  மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×