என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  நாகர்கோவில் அருகே 2 தொழிலாளர்கள் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகர்கோவில் அருகே 2 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
  நாகர்கோவில்:

  குலசேகரம் அருகே ஈஞ்சகோடு, பொன்மனை பகுதியை சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 38) இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

  இவருக்கு மனைவியும் 9 வயதில் மகளும் 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பிராங்கிளினுக்கு குடிபழக்கம் இருந்ததாக தெரிகிறது. மேலும் அவர் புதியதாக வீடு கட்டினார். இதற்காக பலரிடம் கடன் வாங்கியிருந்தார், கடனை கொடுக்க முடியாமல் மனவேதனையில் இருந்தார். சம்பவத்துன்று மது குடித்து வந்ததால் மனைவி கண்டித்துள்ளார்.

  இந்நிலையில் நேற்று இரவு தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்துஅவரது மனைவி ஷோபா குலசேகரம் போலிசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் பினத்தை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  வெள்ளிச்சந்தை காலனி பகுதியை சேர்ந்தவர் கணபதி (67). கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணபதிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது.

  சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் இருந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு  டாக்டர்கள்  தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

  இதுகுறித்து அவரது மகன் பால்துரை அளித்த புகாரின்பேரில்  வெள்ளிச்சந்தை சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×