search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ப்பு யானைகள்
    X
    வளர்ப்பு யானைகள்

    டாப்சிலிப் யானைகள் முகாமில் பொங்கல் கொண்டாட்டம்

    யானைகள் முகாமில் நடந்த பொங்கல் பண்டிகையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
    ஆனைமலை:
     
    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழிகமுத்தியில் யானைகள் வளர்ப்பு முகாமில் கும்கி கலீம், சின்னதம்பி, அரிசி ராஜா உட்பட இதுவரை வனத்தில் இருந்து பிடிக்கப்பட்ட 27 காட்டு யானைகள் சிலவற்றை கும்கி யானைகளாகவும், சவாரி யாணைகளாகவும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 

    தமிழக அரசு உத்தரவின் பேரில் டாப்சிலிப் கோழிகமுத்தி பகுதியில் ஆண்டு தோறும் யானை பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த  2 ஆண்டுகளாக கொரானோ வைரஸ் தொற்று காரணமாக யானை பொங்கல் நடைபெறாமல் இருந்து வந்தது. 
    தற்பொழுது தமிழக அரசு கூடுதல் தளர்வுகள் அறிவித்த நிலையில் சமூக இடைவெளி மற்றும் முக்கவசம் அணிந்து டாப்சிலிப் பகுதிக்கு முன்பதிவு செய்த சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட்டு வனத்துறை வாகனத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்று யானை வளர்ப்பு முகாமுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 

    இந்நிலையில் நேற்று யானை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பழங்குடியின மக்கள் புதுபானையில் பொங்கல் வைத்து வளர்ப்பு யானை களுக்கு அங்குள்ள விநாயகர் கோவிலில் சிறப்புப் பூஜைகள் செய்து பழம், கரும்பு, சத்து மாவு என சத்தான உணவுகளை வழங்கினர்.
     
     மேலும் வளர்ப்பு யானைகள் அங் குள்ள விநாயகர் சிலைக்கு  துதிக்கை கொண்டு நீரால் அபிஷேகம் செய்து பின்னர் அலங்கரிக்கப்பட்ட விநாயகரை இருபுறம் நின்ற யானைகள் துதிக்கை தூக்கி வழிபாடு செய்தது. 

    இதை  அங்கிருந்த  சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்தது. மேலும் கிராமங்களில் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கான பொங்கல் வைப்பது யானை முகாமில் யானை பொங்கல் வைத்து கொண்டாடவது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×