search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை கொள்ளை
    X
    நகை கொள்ளை

    கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நகை கொள்ளை

    கோவையில் ஒரே நாளில் 11 பவுன் நகை திருடு போனது.
    கோவை:
     
    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த வீரபாண்டியை சேர்ந்தவர் பாலசண்முகம் (51). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். 

    இவர் சம்பவத்தன்று  வீட்டை பூட்டி விட்டு குடும்பத் துடன்  கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கோவிலுக்கு சென் றார்.பின்னர் நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை  கண்டு அதிர்ச்சி அடைந்தார்.    

    உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து  பாலசண்முகம் பெரிய நாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெவித்தார். 

    போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். 

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து  கொள்ளையடித்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    கோவை மதுக்கரை அடுத்த  போடிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (47). தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவர் காலை வேலைக்கு சென்று  மறுநாள் காலை வீடு திரும்புவது வழக்கம்.

    சம்பவத்தன்று சக்திவேல் வழக்கம்போல வேலைக்கு சென்றார். வீட்டில் இருந்த  அவரது மனைவி மற்றும் மகன் இரவு வீட்டை பூட்டி விட்டு முதல் மாடியில் தூங்க சென்றனர். காலை சக்திவேல் வீடு திரும்பினார். 

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை  கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க நகை 1 பவுனை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 

    மனைவி மற்றும் மகன் முதல் மாடியில் இருந்ததால் கொள்ளையர்கள் வந்தது அவர்களுக்கு தெரியவில்லை.இதுகுறித்து சக்திவேல் மதுக்கரை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×