search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல் பரிசு பெற்ற பிரபாகரன்
    X
    முதல் பரிசு பெற்ற பிரபாகரன்

    பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு - 21 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார் பிரபாகரன்

    மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாடுபிடி வீரர்கள் 2 பேர் வெளியேற்றப்பட்டனர்.
    பாலமேடு:

    மதுரை பாலமேடு கிராமத்தில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு முடிவடந்தது. 

    சீறிப்பாய்ந்து வரும் காளைகளை அடக்கிய காளையர்களுக்கும், காளையர்களுக்கு போக்குக் காட்டிய காளைகளுக்கும் கட்டில், பீரோ, தங்கக் காசு உள்ளிட்ட பலவகையான பொருட்கள் வழங்கப்பட்டன. 

    இதற்கிடையே, வாடிவாசல் பின்பகுதியில் காளைகளை சட்டவிரோதமாக அவிழ்த்துவிட முயன்ற நபர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

    இந்நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தமாக 729 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதில் 21 காளைகளை அடக்கி தொடர்ந்து 3-வது ஆண்டாக பெதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் முதல் பரிசை தட்டிச் சென்றார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

    பாலமேடு  ஜல்லிக்கட்டில் முதல் இடம் பிடித்த  பிரபாகரன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில், ஜல்லிக்கட்டில் வென்ற மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என தெரிவித்தார். 

    Next Story
    ×